Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஓர் இந்து பசுவை எப்படிப் பார்க்கிறான்?
 
பக்தி கதைகள்
ஓர் இந்து பசுவை எப்படிப் பார்க்கிறான்?

ஒரு நாள் நான் (சுவாமி ரங்கநாதானந்தர்) கல்கத்தாவிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் கல்சரில் அமர்ந்திருந்தேன். திடீரென என் அறைக்குள் சில பிரெஞ்சு நாட்டினர் நுழைந்தனர். ஒருவர் என்னிடம், இந்தியாவில் பசுவை தெய்வமாக வணங்குகிறீர்களே! ஆனால் எவ்வளவு மனிதர்கள் பட்டினியாலும், புரதச் சத்து குறைவாலும் இறக்கிறார்கள்! இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா? என்று கேட்டார். நான் அவர்களை அமரச் செய்து, காரணத்தைக் கூறுகிறேன். கேளுங்கள் என்றேன். வெகு காலத்திற்கு முன்பே குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பால் கொடுப்பது வழக்கம். எனவே பசுவையும் தாயாக பாவிக்கும் எண்ணம் வளர்ந்தது. நாளடைவில் தாயுள்ளத்தின் அடையாளமாகப் பசுவும் கன்றும் கருதப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பசுவையே மக்கள் தாய்மையின் மறு வடிவமாகக் கருதத் தொடங்கினர். விவசாயத்திற்கும் பயனளித்ததால் பசுவை யாவரும் போற்றிப் பாதுகாத்தனர்.

இதுபோன்ற பல கருத்தாழம் நிறைந்த நடைமுறைப் பழக்கங்களால் மனித சமுதாயம் பெற்றது வளர்ச்சியே தவிர வீழ்ச்சியல்ல. இதை ஓர் உயர்ந்த கலாச்சாரம் என்றே கூறலாம். வயதான தாய் தந்தையர் இளைய தலைமுறைக்குப் பொருளாதாரச் சுமைதான். ஆனால் அவர்களைக் கொன்றுவிடயாரும் நினைப்பதில்லை. அவ்விதமாகவே தனது தாய்க்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் தான் ஓர் இந்தியன் பசுவிற்கும் அளிக்கிறான் என்று முடித்தேன். அந்தச் சுற்றுலாப் பயணிகள், இப்போது எங்களுக்கு நன்கு புரிந்துவிட்டது. இதற்கு முன் யாரும் எங்களிடம் இப்படி விவரமாக விளக்கம் கூறியதில்லை. மிக்க நன்றி என்று கூறி விடைபெற்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar