|
பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன்,குருநாதர் கூறும் கடின தத்துவங்களையும் எளிதில் புரிந்து கொள்வான். தத்துவங்கள் மட்டுமின்றி, கட்டட வேலை, தச்சு வேலை, படகோட்டுதல் போன்றவற்றையும்ஆர்வமுடன் செய்வான். இதனால் புதிய விஷயங்களை கற்பதில் தனக்கு நிகர் யாருமில்லை என கர்வம்கொண்டான். அவனைத் திருத்த குருநாதர் விரும்பினார். ஒருநாள் ஆற்றிற்கு நீராடச் சென்ற இளைஞன்,வழியில் முதியவர் ஒருவரைக் கண்டான். அவரின் கனிந்த முகம் இளைஞனைக் கவர்ந்தது. சுவாமி... தாங்கள் யார்? என்றான்.ஆத்ம வித்தையைத் தேடி அலையும் வழிப்போக்கன் என்றார் முதியவர். வித்தை என்றதும் இளைஞன் வேகமாக, இது வரை நான் இப்படி ஒரு வித்தையைப் பற்றி கேள்விப்பட்டதில்லையே... அது பற்றி சொல்லுங்களேன்... என்றான்.மற்ற வித்தை போல இதை பிறர் உதவியுடன் கற்க முடியாது. எளிதில் இது யாருக்கும் கைகூடாது, என்றார்.எனக்கு கைகூடாதது என்று உலகில் ஏதுமில்லை, என்றான் இளைஞன் கர்வமான குரலில். அப்படியா...முதலில் தான் என்ற கர்வம்,தற்பெருமை, உடல்பலம், பணபலம் இவையெல்லாம் உண்மை என்று நம்புபவர்களுக்கு இந்த வித்தை கை கூடாது. இப்படியெல்லாம் அலைபாயும் மனதைஅடக்குவதே ஆத்ம வித்தை, என்றார் முதியவர். முதியவரின் இந்த விளக்கம், இளைஞனுக்குசுள்ளென உரைத்தது. அன்றுமுதல், அவன் தான் என்ற கர்வத்தை கைவிட்டான்.
|
|
|
|