|
வசிஷ்டர் தன் ஏழுவயது பேரனான பராசரருடன்கங்கைக் கரைக்கு வந்தார். அப்போது மார்க்கண்டேய முனிவரும் வந்தார். மார்க்கண்டேயர், வசிஷ்டரின்அருகில் இருந்த பராசரரைக் கண்டார். ஏழுவயது சிறுவரான அவர் அருகில் சென்று வணங்கினார். இதைக் கண்ட பராசரர் திகைத்தார். அப்போது மார்க்கண்டேயர், எனக்கு வாழ்த்தவயதில்லை. ஏனென்றால் என்னை விட நீங்கள் வயதில் மூத்தவர். அதனால் தான் வணங்குகிறேன் என்றார்.இதைக் கேட்ட பராசரர்,நீங்கள் சொல்வதுவேடிக்கையாக இருக்கிறதே.... நான் ஏழு வயது சிறுவன்.பிரம்மாவால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டு, பிரளய காலம் வரும் வரையுள்ள காலத்தை ஒரு கல்பம் என்றுசொல்வார்கள். இப்படி ஏழு கல்ப காலமாக வாழ்பவர் நீங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க என்னை மூத்தவர் என்கிறீர்களே... என்றார். வாழ்ந்த காலத்தை மட்டும் வைத்து வயதைக் கணக்கிடக் கூடாது. கடவுளைச் சிந்திக்கும் நேரமே நம்முடைய நேரம். மற்ற நேரமெல்லாம் வீணாகக் கழிந்தவையே. வசிஷ்டரின் பேரனான தாங்கள், எப்போதும் தெய்வீக சிந்தனையுடன் வாழ்பவர். அந்த வகையில், எனக்கு வயது ஐந்து தான் ஆகிறது. தங்களுக்கோ ஏழாகி விட்டது என்று பணிவுடன் சொன்னார்.ஆம்...காலம் நம் வயதை நிர்ணயிப்பதில்லை.கடவுளை நினைக்கும் நேரத்தைப் பொறுத்தேநிர்ணயிக்கப்படுகிறது. |
|
|
|