|
சுவாமி விவேகானந்தர் தம் தாய் நாட்டு மக்களை மட்டுமா நேசித்தார்! ஜீவன் முக்தரான அவருக்கு உலகிலுள்ள ஜீவர்கள் யாவரும் சிவ சொரூபமாகத் தெரிந்தனர். அந்த ஜீவர்களுக்காகச் சேவை செய்வதும், அவர்களுக்கு அவரவரின் சிவ சொரூபத்தைக் காட்டியருளியதும்தான் அவரது மிக முக்கிய தொண்டு. கொல்கத்தா பேலூர் மடத்தில் ஒருநாள் இரவு மனஅமைதியின்றி சுவாமிஜி பரபரப்பாக உலாவிக்கொண்டிருந்தார். அப்போது அவரது சக சீடரான சுவாமி விஞ்ஞானானந்தர் (பேசன்) திடீரென்று எழுந்தார். பிறகு யோசிக்கலானார், என்ன இது? இந்த நடு இரவில் சுவாமிஜி இப்படி ஓய்வின்றி மன உளைச்சல்பட்டுக் கொண்டிருக்கிறாரே! சுவாமிஜி என்ன வாயிற்று? உடம்பு சரியில்லையா? என்று கேட்டான்.
உடனே அவர், வா பேசன், தூங்கிக் கொண்டு தான் இருந்தேன். சட்டென ஒரு பெரிய பாரம் என் நெஞ்சத்தைத் தாக்கியது போல் உணர்ந்தேன். ஆம், உலகில் ஏதோ ஒரு பகுதியில் ஏராளமான மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். உலகில் எங்கோ மக்கள் துன்பப்படுவது இவருக்கு எப்படி தெரிகிறது. ஒரு வேளை மனபிரமையாக இருக்குமோ! என்று யோசிக்கலானார். சுவாமிஜி, கவலைப்படாதீர்கள், யாருக்கும் ஒன்றும் நிகழ்ந்திருக்காது, நீங்கள் ஒவ்வொருவரின் துன்பத்திற்காகவும் கவலைப்பட்டே உங்களது உடல்நலனைக் கெடுத்துக் கொண்டீர்கள். என்று சுவாமி விஞ்ஞானானந்தர், கூறினார். இல்லை தம்பி, மக்களின் துன்பம் என்னை மிகவும் வாட்டுகிறது. நான் அவர்களுக்கு எப்படி உதவுவேன்....? என்று மனம் வருந்தி சுவாமிஜி கூறினார். சுவாமி விஞ்ஞானானந்தர் பலவாறு சுவாமிஜியை சமாதானப்படுத்தினார்.
மறுநாள் காலையில் ஒருவர் செய்தித்தாளுடன் சுவாமி விஞ்ஞானானந்தரைச் சந்தித்தார். மகராஜ், பிஜித்தீவில் நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் மடிந்துவிட்டார்கள். என்று கூறினார். உடனே சுவாமிஜி பதட்டத்துடன் அடடா, எவ்வளவு பெரிய துயரம்! எத்தனை பேர் துடிதுடித்து இறந்தனரோ, சின்னா பின்னமான குடும்பங்கள் எத்தனையோ! என்று பரிதாபதோடு கூறினார். மகராஜ், நடு இரவில் இந்தக் கோரச் சம்பவம் நடந்திருக்கிறது என்று பத்திரிகையில் வந்திருக்கிறது. என்ன சொன்னாய்? நடு இரவிலா? எந்த நேரம் என்று சரியாகச் சொல். என்று மறுபடியும் கேட்டார். அந்த பக்தர் இரவு 12 மணிக்கு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார். உடனே விஞ்ஞானானந்தர் சூழ்ந்த யோசனையில் மூழ்கினார். என்ன விந்தை இது! சுவாமிஜி உணர்ந்தது மிகச் சரியாகத்தான் உள்ளது. நிலநடுக்கத்தால் மக்கள் மடிந்த துயரத்தை அந்த நேரத்தில் சுவாமிஜியும் சரியாக உணர்ந்திருக்கிறார். அதனால் தான் அப்படித் துடித்தார். ஆ, நிலநடுக்க அளவைக் காட்டும் கருவியைவிட சுவாமிஜியின் உணர்வு மிகவும் துல்லியமானது. என்று தன் மனதினுக்குள் யோசிக்கலானார்.
பிறர் துன்பம் உணர்வது என்பது தெய்வ தரிசனம் பெற்ற மகான்களின் இயல்பு. உலக சுகங்களைத் துச்சமாகத் தள்ளிவிடும் அந்த அருளாளர்கள் மக்களின் துன்பங்களைத் தீர்ப்பதில் தெளிவாக உள்ளார்கள். சுவாமி விவேகானந்தரின் மக்கள் மீதான பரம கருணையைக் கண்ணெதிரே கண்ட சுவாமி விஞ்ஞானானந்தரின் வாழ்வில் ஒரு சம்பவம். சுவாமி விஞ்ஞானானந்தர் அலகாபாத்தில் ராமகிருஷ்ண மடம் நிறுவி நடத்திக் கொண்டிருந்தார். மடத்திற்கென ஒரு மருந்தகம் இருந்தது ஒரு நாள். மகராஜ், நமது மருந்தகத்தில் பணி புரியும் மருத்துவர் திடீரென்று நின்றுவிட்டார். என்று கூறினார். அடடா, வேறு மருத்துவர் யாரும் இல்லையா? என கேட்டார். இல்லை மகராஜ், மருந்து கிடைக்காமல் பல ஏழைகள் மிகவும் தவிக்கின்றனர். இப்போது என்ன செய்தால் மக்களை காப்பாற்ற முடியும். ஓ, பகவானே ராமகிருஷ்ணா! இது என்ன சோதனை! மக்கள் சேவை சரிவர நடக்கவில்லையே வழிகாட்டுங்கள் பிரபு. என்று பகவானை வேண்டிக்கொண்டார் சுவாமிஜி.
இவ்வாறு விஞ்ஞானானந்தர் அன்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் முடிவில் அந்த ஊழியரிடம். தம்பி, நாளை காலை நான் மருந்தகத்திற்கு வருகிறேன். நானே எல்லோருக்கும் மருந்து கொடுக்கிறேன். என்று கூறினார். சுவாமிகளுக்கு மருத்துவமும் தெரியுமோ? என்று யோசித்தான் உழியர். அவர் சொன்ன மாதிரியே, சுவாமிகள் மறுநாள் காலை எல்லா நோயாளிகளுக்கும் மருந்து தந்தார். அதை உட்கொண்டவர்கள் உடனே சுகமடைந்தார்கள். இதனால் மக்கள் பெருமளவில் திரண்டு வர ஆரம்பித்தார்கள். நம்ம சாமி கையாலே மருந்து வாங்கினா, எந்த வியாதியும் உடனே குணமடைஞ்சிடுது என்று அங்கிருந்த பெண் ஒருவர் கூறினார். மகராஜ் நீங்க கைராசி உள்ளவரு, எனக்கு வயித்திலே என்று ஆரம்பித்தாள் ஒரு பெண்!
சுவாமிஜி, அம்மா அதெல்லாம் என்னிடம் காட்டாதே. எதுவும் சொல்லவும் வேண்டாம். இந்த மருந்தை நம்பிக்கையோடு சாப்பிடு. உன் நோயைத் தீர்ப்பது பகவானுடைய கடமை என்று கூறினார். மக்கள் கூட்டங் கூட்டமாகத் திரண்டு வந்து நோயிலிருந்து நிவராணம் பெற்றனர். இதற்குள் ஒரு புது மருத்துவர் பணியில் சேர்ந்தார். புதிய மருத்துவரிடம் மருந்தகத்தைச் சுற்றிக் காண்பித்தார் சுவாமிகள், அங்கே மருந்துகள் எல்லாமே காலியாக இருந்தன. அதிகம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அடர் நைட்ரிக் அமிலமும் தீர்ந்திருந்தது. மகராஜ் உங்களுக்கு மருத்துவப் பயிற்சி உண்டா? என்று வந்திருந்த டாக்டர் கேட்டார். சுவாமிஜி, இல்லை டாக்டர், எனக்கு எந்தவித மருத்துவமும் தெரியாது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டே மக்களின் நோய் நீங்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கைக்குக் கிடைத்த மருந்தைக் கொடுத்தேன் அவ்வளவுதான் என்று கூறினார். அந்த தெய்வ பலத்தால்தான் சுவாமிகளே அடர் நைட்ரிக் அமிலம் கொடுத்தும் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. உங்களது பக்தியே பக்தி மகராஜ் என்று டாக்டர் கையெடுத்துக் கும்பிட்டார். வைத்தியன் நாராயண ஹரிதான் டாக்டர். என் புகழ் எதுவுமில்லை. எல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் என்று சுவாமிஜி கூறினார். |
|
|
|