Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேலையில் கவனக்குறைவு கூடாது!
 
பக்தி கதைகள்
வேலையில் கவனக்குறைவு கூடாது!

ஒருசமயம் சிவபெருமான் பார்வதிதேவிக்கு ஆகமங்களை உபதேசித்தார். குழந்தைகளான விநாயகர், முருகனை நந்தியிடம் ஒப்படைத்து கவனித்துக் கொள்ள சொல்லி விட்டார். தேவிக்கோ பாடத்தில் நாட்டமில்லாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிவபெருமான் கோபமடைந்து அவளை மீனவப்பெண்ணாகப் பிறக்கும்படி சாபமிட்டார். இந்த நேரத்தில் விநாயகரும், முருகனும் அங்கே வந்தனர். தாயை சபித்த தந்தை மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. ஆகமச் சுவடிகளை கடலில் விட்டெறிந்தனர். மனைவியிடம் கோபித்தது போல பிள்ளைகளிடம் கோபிக்க முடியுமா? அதனால் கோபம் வேறு பக்கம் திரும்பியது. அம்பாளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் போது பிள்ளைகளை பாட அறைக்குள் அனுமதித்த நந்தீஸ்வரரிடம். கொடுத்த வேலையைச் சரிவர செய்யாத நீ பாதுகாவலுக்கு தகுதியில்லாதவன், எனக்கூறி அவரை சுறாமீனாகப் பிறக்குமாறு சபித்தார். கடலுக்குள் சுறாவாகத் திரிந்த நந்தீஸ்வரர் கடும் அட்டகாசம் செய்தார். மீனவர்கள் துன்பப்பட்டனர். அதைப் பிடித்து தரும் மீனவனுக்கு தன் மகளை திருமணம் செய்து தருவதாக அறிவித்தார் மீனவர் தலைவர். சிவபெருமானே மீனவ இளைஞனாக வந்து சுறாவின் கொட்டத்தை அடக்கினார். தன் மீது பக்தி கொண்ட மீனவர் தலைவனுக்கு உண்மை வடிவில் காட்சி தந்து பார்வதியை மணந்தார். படிக்கும் போது வேடிக்கை பார்க்கக்கூடாது, வேலையில் கவனக்குறைவு கூடாது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar