|
மீனவர்கள் கடலில் வலைவீசி மீன் பிடிப்பார்கள். அதுபோல, பக்தர்களுக்கும் கையில் வலை வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். பக்திவலையில்படுவோன் காண்க என்பது அவர் வாக்கு.காட்டில் கிடைத்த உலர்ந்த கனிகளை ராமனுக்கு அளித்தாள் சபரி. ராமன் அந்தக் கனிகளில், சபரியன்னையின் அன்பினைக் கண்டு மகிழ்ந்தார். கவுரவர்கள் அளித்த விருந்தை விட,விதுரரின் எளிய உணவை விரும்பி சாப்பிட்டார் கிருஷ்ணர். வலுவிழந்த அணில், சேது பாலம் கட்ட, உடலில் ஒட்டியிருந்த மணலைத் துõவி விட்டது. அதன் பணியை ஏற்று, அணிலின் முதுகில் தடவிக்கொடுத்தார் ராமன். கீதையில் கண்ணனும்,எனக்கு இலையோ,மலரோ, கனியோ,இயலாவிட்டால்தண்ணீரோ கூடபடைத்தால் போதும். ஆனால், பக்தியும், மனத்துõய்மையும்இருந்தால் அன்புடன்ஏற்று மகிழ்வேன்,என்கிறார்.கடவுள் மலை போல எட்டாத உயரத்தில்இருக்கிறார். ஆனால்,அவரை அன்பால் கட்டி இழுத்து விடலாம் என்கிறார் வள்ளலார். இப்படியாக பக்திவலையை வீசி பரம்பொருளை சிக்க வைக்கலாம்.
|
|
|
|