|
ஒரு மண்டபத்தில் துறவி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்தப் பக்கமாக வந்த திருடன் துறவியைப் பார்த்தான். பரதேசியாக தோற்றம் தரும் இவனும் ஒரு திருடனாகத் தான் இருக்க வேண்டும். இரவெல்லாம் கண்விழித்து திருடியதால் தன்னை மறந்து துõங்குகிறான் என்று எண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தான். சற்று நேரத்தில் குடிகாரன் ஒருவன் துறவியைக் கண்டான். நிதானம் இல்லாமல் குடித்ததால் இப்படி நினைவை இழந்து கண்மூடி இருக்கிறான், என்று உளறியபடி துறவியைக் கடந்து சென்றான். கடைசியாக ஒரு நல்லவன் அந்த மண்டபத்தின் அருகில் வந்தான். அவனுக்கு துறவியின் முகம் மலர்ந்த தாமரை போல காட்சியளித்தது. ஆகா....பெரிய மகான் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்கிறாரே என்று சொல்லி சாஷ்டாங்கமாக அவரின் விழுந்து வணங்கினான். மனம் என்னும் கண்ணாடியில் அவரவர் எண்ணமே பிரதிபலிக்கிறது. எனவே மனதை நல்ல விஷயங்களின் பக்கமாக திருப்புங்கள். |
|
|
|