Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள்!
 
பக்தி கதைகள்
கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள்!

ஒரு சமயம் கிருஷ்ணரும் அர்ஜுனனும் பூங்கா ஒன்றில் உலாவிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, வானத்தில் ஒரு பறவை பறந்துகொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். பிறகு அதை அர்ஜுனனுக்குக் காட்டினார். அவனும் அதைப் பார்த்தான். அர்ஜுனா, அது புறாதானே? என்று கேட்டார். கிருஷ்ணர். ஆமாம், கிருஷ்ணா, அது புறாதான்! என்றான், அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு, பார்த்தா, எனக்கென்னவோ அந்தப் பறவை ஒரு பருந்துபோல் தெரிகிறது! என்றார், கிருஷ்ணர். அடுத்த விநாடியே, ஆமாம்..... ஆமாம்.... அது பருந்துதான்! என்று சொன்னான், அர்ஜுனன். மேலும் சில விநாடிகள் கழித்து, அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால் அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது? கிருஷ்ணர் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல், தாங்கள் சொல்வது சரிதான்.... அது கிளிதான்! என பதிலளித்தான், அர்ஜுனன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆனதும், அர்ஜுனா, முதலில் சொன்னதெல்லாம் தவறு. இப்போதுதான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு காகம்! கள்ளச் சிரிப்புடன் கூறினார். கிருஷ்ணன்.

நிஜம்தான் கிருஷ்ணா..... அது காகமேதான். கொஞ்சமும் சந்தேகமே இல்லை! பதிலளித்தான், அர்ஜுனன். என்ன நீ, நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறாயே.... உனக்கு என்று எதுவும் யோசிக்கத் தெரியாதா? கிருஷ்ணர், கொஞ்சம் கோபம் கொண்டவர்போல் கேட்டார். கிருஷ்ணா, என் கண்ணைவிடவும் அறிவை விடவும் எனக்கு உன்மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீ ஒன்றைச் சொன்னால், அது பருந்தோ, காகமோ, புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. அதனால், நீ என்ன சொல்கிறாயோ அப்படித்தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினைவிட வேறு எதன்மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்? அமைதியாகச் சொன்னான் அர்ஜுனன். இந்த நம்பிக்கைதான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது. கடவுள் மேல் கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை வையுங்கள். அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்றமுடியும் என்பதை உணருங்கள். உங்களுக்குத் துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் தெய்வத்தையே நம்புங்கள். உங்கள் சங்கடங்களைப் போக்கவும், சந்தோஷத்தை நிலைக்கவைக்கவும் கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள். ஆண்டவன் உங்கள் அருகிலேயே எப்போதும் இருப்பார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar