|
ஞானி ஒருவர், தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன், குருவே உண்மையான பக்தியை இனம் காண முடிவதில்லை. அதன் சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. சில பக்தி மார்க்கங்கள் வித்தியாசமான நடைமுறைகளும் சாத்தியம் என்கின்றன. இவ்வளவு குழப்பங்களையும் கடந்து, பக்தி மார்க்கத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? என்று கேட்டான்.
சீடன் கேட்டதும் அமைதியாகப் புன்னகைத்த ஞானி, சர்க்கரையை மணலுடன் கலந்து வைத்தாலும் எறும்பானது மணலை விட்டுவிட்டு சர்க்கரையை மட்டுமே எடுத்துக்கொள்ளும். தனக்கு எது தேவை என்பதை அது உணர்ந்திருப்பதால்தான் அது சாத்தியமாகிறது. அது போலவே நீங்களும் உங்களுக்கு அவசியமானது எது என்பதை உணர்ந்து, புறக்கண்ணை விடுத்து, அகக்கண் கொண்டு நோக்கினால் உண்மையான பக்தி புரிந்து விடும்! என்றார். |
|
|
|