|
குரு ஒருமுறை தனது சீடர்களிடம் கேள்வி கேட்டு, அவர்களின் திறமையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். நீங்கள் பிரார்த்தனை செய்வதில் மனம் மகிழ்ந்த இறைவன், ஒரு மந்திர தேவதையை உங்களுக்கு உதவ அனுப்பினால், தேவதையிடம் நீங்கள் என்ன வேண்டிக் கேட்பீர்கள்? அதற்கு ஒரு சீடன், எனக்காக அன்றி, இந்த ஆசிரம வேலைகள் செய்ய நிறைய பணியாட்களைக் கேட்பேன்! என்றான். இரண்டாவது சீடன், தேவதையை எனக்கு உலகைச் சுற்றிப் பார்க்க உதவும்படி வேண்டுவேன்! என்றான். மூன்றாவதாக, ஒரு சீடன், வகை வகையான உணவுகளை வரவழைத்துத் தரச் சொல்லி உண்பேன்! என்றான். நான்காவதாக எழுந்த சீடன், மந்திர தேவதையைத் திருப்பி அனுப்புவேன்! என்றான். குரு ஏன்? என்று கேட்க, அவரவர் உழைத்தால்தான் முன்னேற்றம். அதிஷ்டத்தால் கிடைப்பது நிலைக்காது குருவே! என்றான். அச்சீடனை குரு வெகுவாகப் பாராட்டினார். |
|
|
|