|
விஷ்ணுவின் வடிவாக கருதப்படுவர் ஹயக்ரீவர். ஹயக்ரீவர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் சேர்வதில்லை. இவர் குதிரை முகமும், மனித உடலுமாக உருவெடுத்து நம்மை காக்கிறார். ஹயக்ரீவரை கல்வியின் தெய்வம் என குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன்.
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்ற தூய்மையானவரும், கல்வி (அறிவு)யாவற்றுக்கும், ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை மனத்தால் வணங்குகிறேன்.
அவதாரக் காரணம்: மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்து, பாதாள உலகத்திற்குச் சென்று அதனை ஒளித்து வைத்தனர். அவர்கள் எல்லோரையும் போருக்கு வரச்செய்து, போரில் வெற்றி அடைந்து வந்தனர். அவர்கள் இருவரும் பிரம்மாவின் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். வேதங்கள் பறிபோன பின்னர். வேதங்களை மீட்டுத் தரும்படி பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று வேண்டினார். விஷ்ணுவும் குதிரை முகமும் மனித உடலுமாய் ஹயக்ரீவராய் உருவெடுத்து, மது கைடபர்களை போரில் வென்று, வேதங்களை மீட்டு திரும்ப பிரம்மாவிடம் கொடுத்தார். சிராவண மாதம், சிரவணம் நட்சத்திரம், பவுர்ணமி அன்று ஹயக்ரீவர் அவதரித்தார். அதனால் அன்று ஹயக்ரீவருக்கு உகந்த நாளாக கொண்டாடுகின்றனர்.
ஹயக்ரீவர் வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தரும் கடவுள் வாதிராஜர் என்ற மத்வ குருமார் அவருடைய உபாசனா தெய்வம் கல்விக்கடவுளான ஹயக்ரீவர், வேக வைத்த கடலைப்பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட ஹயக்ரீவபண்டி என்னும் பிரசாதம் ஹயக்ரீவருக்கு மிகவும் பிடித்தது. அதனை தினமும் செய்து ஹயக்ரீவரை வேண்டி பூஜைகள் செய்து, தன்னுடைய தலையின் மேல் தட்டில் வைத்துக் கொள்ள ஹயக்ரீவரும் வெள்ளைக் குதிரை வடிவில் வந்து உண்டு செல்வார்.
திருமலையில் திருமலையான் கோயிலின் அருகினிலேயே வராஹ ஸ்வாமி கோயிலும், ஹயக்ரீவர் கோயிலும் உள்ளது. அவர் அவதரித்த நன்னாளில் கல்விக் கடவுளாம் ஹயக்ரீவ ஸ்வாமி கோயிலில் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் (கல்வி தொடங்கி வைத்தல்) செய்யப்படுகிறது. லக்ஷ்மி ஹயக்ரீவரை வேண்டினால் கல்வியோடு செல்வத்திருமகளாம். லக்ஷ்மியின் கடாக்ஷமும் கிடைத்து செல்வமும் பெற்று வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும். |
|
|
|