|
மன்னன் ஒருவன் தன் ராஜகுருவிடம், ஐயா, முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு எண்ணங்கள் வந்து அலைமோதுகின்றன. சரியான முடிவை எப்படித் தேர்ந்தெடுப்பது? என்று கேட்டான். அதற்கு ராஜகுரு மன்னா! ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும்போது கோழைத்தனம், அது ஆபத்தில்லையா? என்று கேட்கும். சமயோஜிதம், அதில் பயனுண்டா? என்று கேட்கும். செருக்கு, அதில் புகழுண்டா? என்று கேட்கும். ஆனால் மனச்சாட்சியோ, அது நியாயமானதா? என்று கேட்கும். எனவே மனசாட்சிப்படி நட, குழப்பம் வராது! என்றார் மன்னனும் தெளிவு பெற்றான். |
|
|
|