|
ஒரு முனிவர் எப்போதும் பட்டினியே கிடப்பார். பசியைத் தாங்க முடியவில்லையென்றால் காட்டில் கிடைக்கும் ஒன்றிரண்டு கனிகளை உண்டார். ஏரியில் நீர் குடிப்பார். ஒருநாள் அதிகப் பசியின் காரணமாக மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். மறுநாள் விறகு வெட்டும் தொழிலாளி ஒருவன் அப்பக்கம் வந்தபோது முனிவரின் நிலையறிந்து, தான் கொண்டு வந்த உணவில் கொஞ்சம் முனிவருக்குக் கொடுத்தான். உணவு உண்டாக்கிவிட்டது. நீர் குடிக்கவேண்டும். தம்மிடம் இருந்த தண்ணீர்க் குடுவையைக் கொடுத்தான். முனிவரோ வாங்க மறுத்துவிட்டார். முனிவரோ, “மகனே! உயிர் போகிற நிலையில் ஒருவன் மற்றவரிடம் உதவி பெறலாம். இதற்கு ஆபத் தர்மம் என்று பெயர். என் உயிர்ப்போய் விடும் நிலையில் சிறிது உணவளித்துக் காப்பாற்றினாய். நானும் பிழைத்தேன். இப்போது எனக்குச் சக்தி வந்துவிட்டது. நானே போய் நீர் குடித்துக்கொள்கிறேன் என்று சொல்லி, ஏரியை நோக்கி நடக்கத் தொடங்கினார். |
|
|
|