|
ஏழைத் தொழிலாளி ஒருவன், எந்தவொரு சின்ன விஷயத்திற்கும் துறவியொருவரின் ஆலோசனை கேட்டு நடப்பான். அவனது கஷ்டத்தைப் போக்க எண்ணிய துறவி, அவன் அறியாமல் சில தங்கக் காசுகளை, அவன் குடிசையின் வாசலில் புதைத்து வைத்தார். அதற்குக் காரணம், நேரடியாகத் தந்தால் அவன் வாங்க மறுத்துவிடுவான் என்பதே. சில நாட்கள் கழித்து செடிகள் நடுவதற்காக மண்ணைக் கொத்திய தொழிலாளி, அங்கு தங்கக் காசுகள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான் யாருடையது இது? என தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். யாருடையதுமில்லை ஆனாலும் தானே எடுத்துக்கொள்ள மனசு கஷ்டப்பட்டது. எனவே ஓடுகிற நதியில் அப்பொற்காசுகளை விட்டெறிந்தான். நடந்ததை எல்லாம் துறவியிடம் சொன்னான். துறவி வருத்தத்தோடு, நான் தான் உனக்காகப் பொற்காசுகளை புதைத்து வைத்தேன். எப்போதும் என் ஆலோசனை கேட்கும் நீ , இங்போது ஏன் கேட்கவில்லை? என்றார். பழக்கத்தை மாற்றியதால் வந்த வினையை எண்ணி வருந்தினான் தொழிலாளி.
|
|
|
|