|
ஆசிரமம் ஒன்றுக்கு விஜயம் செய்த மன்னன் ஒருவன் அகந்தையுடன், அரசாங்க காரியங்களைச் செய்யும் ஆற்றல் துறவிகளுக்கு இல்லை என்றார். அதற்கு அங்கிருந்த தலைமைத் துறவி, துறவிகளுக்கு ஆற்றல் இல்லை என்பதில்லை. அவர்கள் அதை விரும்புவதில்லை. கழுதைபோல் பொதி சுமக்க குதிரைக்கும் சக்தியுண்டு. ஆனால் அது பொதியைச் சுமக்க சம்மதிப்பதில்லை என்றார்.
|
|
|
|