|
ஒரு முனிவரிடம் சீடன் ஒருவன், குருவே! இறைவனாகிய பரம்பொருளைக் காண தடையாக இருப்பது எது? என்று கேட்டான். மனிதனின் அகங்காரம்தான் மாயை. அதுதான் எல்லாவற்றையும் திரையிட்டு மறைக்கிறது. சிறு துணியை முகத்தின் முன்னே திரையிடும்போது எவ்வாறு எதிரில் உள்ள பொருளை பார்க்க முடிவதில்லையோ, அவ்வாறே இறைவன் அருகில் இருந்தாலும், நான் என்ற அகங்காரம் கொண்ட மாயை பரம்பொருளான இறைவனைக் காண தடையாக இருக்கிறது! என்றார் முனிவர். |
|
|
|