|
புத்தர் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். அதில் ஒருவன், அந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? இனி வசந்தம் வருமா தெரியவில்லையே... என்று வருத்தப்பட்டுக் கொண்டான். இது அவர்களின் காதில் விழுந்தது. அப்போது புத்தர் சீடர்களிடம், மனிதனின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா? என கேள்வி கேட்டார். ஒரு சீடர், அறுபது ஆண்டு என்றார். இன்னொருவரோ, அதெப்படி... சிலர் எழுபது, எண்பது ஆண்டுகள் கூட இருக்கிறார்களே! என்று மறுத்தார். இப்படி ஆளாளுக்கு பதில் சொல்ல புத்தர் இடைமறித்தார். மனிதர்கள் தற்போது எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? சிலர் கடந்த காலத்தைச் சிந்தித்து கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சிலர் எதிர்காலம் குறித்த கற்பனையில் ஏங்கித் தவிக்கிறார்கள். அதனால் நிகழ்காலத்தைக் கோட்டை விடுகிறார்கள். நிகழ்காலத்தில் விழிப்புடன் இருப்பவனே நிறைவுடன் வாழ்கிறான். நிகழ்காலமே அவன் வாழும் காலம், என்றார். |
|
|
|