|
மகான் ஒருவரிடம் கல்வி கற்க இளைஞன் ஒருவன் வந்தான். மகானைப் பணிவாக வணங்கிய அவன், உங்களிடம் நான் எப்படிக் கல்வி கற்க வேண்டும்? சொல்லுங்கள். அப்படியே கற்றுக்கொள்கிறேன்.! என்றான். என்னை ஒரு மணியாக நினைத்துக்கொள்! என்றார் மகான். நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை! என்றான், இளைஞன். மணியை மெல்லத் தட்டினால் மெல்லிய ஓசைதான் கேட்கும். வலிமையாகத் தட்டினால் பேரோசை கேட்கும். தட்டமாலேயே இருந்தால் ஓசையே கேட்காது! என்றார். மகான். கற்கும் முறையைப் புரிந்துகொண்டான் இளைஞன். |
|
|
|