|
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பெரியவரை யாரோ ஒருவன் தட்டி எழுப்பி, பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது! என்றான். நீ யாரப்பா! என்மேல் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என்றார், பெரியவர். நான்தான் சைத்தான்! என்றான், வந்தவன். பெரியவருக்கு ஆச்சரியம்! நீ எல்லோரையும் தூங்க வைத்து, பிரார்த்தனை செய்யவிடாமல் தடுப்பவனாயிற்றே! என்னை மட்டும் எழுப்பி பிரார்த்தனை செய்யச் சொல்கிறாயே! என்றார். அதற்கு சைத்தான், நேற்று நீங்கள் பிரார்த்தனை செய்யத் தவறிவீட்டிர்கள். அதனால் மிகவும் வருத்தப்பட்டு, அழுதீர்கள்! கடவுள் நீங்கள் வருந்தியதைக் கண்டு மனமிரங்கி, நீங்கள் பிரார்த்தனை செய்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய பலன்களைக் காட்டிலும் கூடுதல் பலன்களைக் கொடுத்து விட்டார். இன்றும் நீங்கள் உறங்கிவிட்டால் மறுபடியும் அழுது, அதிகமான நன்மைகளைப் பெற்று விடுவீர்களே! அதனால்தான் எழுப்பினேன்! என்றான் சைத்தான். தொழுதாலும், அழுதாலும் கடவுளிடம் பலன் உண்டு.
|
|
|
|