|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » ஊஞ்சல் நின்றது? |
|
பக்தி கதைகள்
|
|
கயிலையில் ஏகாந்த ஆனந்தமாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தனர் பரமனும் பார்வதியும். இதைக் கண்ட ஒரு முனிவர் அவர்களை தரிசிக்க அங்கு வந்தார். என்ன ஒரு அற்புதம் ! ஆஹா... ஆஹா... என்ன அருமையான தரிசனம்..! என தன்னை மறந்து வியப்படைந்த முனிவர் தம்மை மறந்த பரவசத்தில், இன்னும் சற்று நெருங்கிச் சென்று பரமனையும் பார்வதியையும் தரிசித்தார்.. அவர்களின் முன் முனிவர் போய் எதிரே நின்றதும் இறைவனும் இறைவியும் ஆனந்தமயமாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் சட்டென்று நின்றவிட்டது. உடனே முனிவன் பரமனையும் பார்வதியையும் பார்த்து அம்மையே போற்றி... அய்யனே போற்றி... ஓம் சிவாய நம..! என வணங்கினார்! உடனே அந்த முனிவன் ஆ.. என்ன ஆயிற்று... அய்யனே... அம்மையே... தாங்கள் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் ஏன் திடீரென்று நின்றது?
பதட்டத்துடன் முனிவர் கேட்டதற்கு, அதற்கு அன்போடு பதில் சொன்னாள் அம்பிகை. முனிவனே... எங்களின் ஊஞ்சல் ஆட்டம் நின்றதற்குக் காரணம் நீதான்..! என்னச் சொல்கிறீர்கள் தாயே என்று முனிவன் கேட்டான். இறைவி சொன்னதைக் கேட்டதும் மேலும் அதிர்ந்துபோனார் முனிவர். அன்னையே... என்ன சொல்கிறீர்கள்? நான் அப்படி என்ன பாவம் செய்தேன்? என்று மறுபடியும் கேட்டான் முனிவன் அதற்கு அம்பிகை பாவம் எல்லாம் இல்லை முனிவனே... நீ நிற்கும் இடம்தான் அதற்குக் காரணம்.! என்னச் சொல்கிறீர்கள் தாயே! என்று முனிவன் கேட்டான் உடனே அம்பிகை ஆம்! முனிவரே! தாங்கள் நிற்கும் இடத்தை சற்றுப் பாருங்கள் என்று கூறினாள் அம்பிகை!
முனிவரும் அம்பிகை சொன்னபடியே உற்று நோக்கினார் இடத்தை ஒரு முறை உற்றுப் பார்த்த முனிவர், காரணம் புரியாமல் விழித்தார். திணறலுடன் தேவியிடமே கேட்டார். அதற்கு தேவி பதில் கூறினாள். தாயே..நான் நிற்கும் இடத்தில் என்ன குற்றம் இருக்கிறது? எனக்கு எதுவும் புரியவில்லையே! என்று முனிவன் கேட்டார் முனிவன். அதற்கு தேவி கோவபடமாமல் பொறுமையுடனும் புன்முறுவலுடன் முனிவனின் கேள்விக்கு பதிலளித்தாள் பார்வதி தேவி. முனிவனே! நந்தி தேவன் எப்போதும் எமக்கு முன்பாக அமர்ந்து எங்களை தியானித்துக் கொண்டே இருக்கிறான். அவனது சீரான சுவாசக் காற்றே எங்களது ஊஞ்சலை ஆட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். நீ நந்திக்கும் எமக்கும் குறுக்கே வந்து நின்றுவிட்டதால் அவனது முச்சுக்காற்று தடைப்பட்டு, எங்களது ஆட்டம் நின்றுவிட்டது. என்று கூறினாள் பார்வதி தேவி இதைக் கேட்ட முனிவன் பார்வதிதேவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான் இதன்மூலம் நந்திக்கும் உங்களுக்கும் இடையே செல்லக் கூடாது என்று பெரியோர்கள் சொல்வதன் அர்த்தம் உணர்ந்தேன்.. என்று தெரிந்துக்கொண்டதன் வாயிலாக யாருக்கும் கிடைக்காத பெரும் தரிசனம் எமக்கு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டதோடு மட்டுமின்றி என்று என்னை மன்னியுங்கள் தாயே என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றான் முனிவன்...! |
|
|
|
|