|
குருவிடம் வந்த சீடன் ஒருவன், சுவாமி! உங்களிடம் தியானப் பயிற்சியுடன் வாள் பயிற்சி, குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்! என்றான். சீடனை உற்றுப் பார்த்த குரு, வலது கண்ணால் இடதுபுற மரக்கிளையில் உள்ள புறாவையும்; இடது கண்ணால் வலது மரக்கிளையில் உள்ள பருந்தையும் பார்! என்றார். சீடனுக்கு குருவின் மீது கோபம் வந்தது. இரண்டு கண்களால் ஒரே சமயத்தில் இரு வேறு பொருள்களைப் பார்க்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றான். இரண்டு முயல்களை ஒரே நேரத்தில் விரட்டிப் போகும் வேட்டைக்காரனால் ஒரு முயலைக்கூடப் பிடிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைப் போலத்தான் நீ கேட்டதும் சாத்தியமாகாது! என்றார் குரு. |
|
|
|