|
ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான். குருவே! நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன? குரு அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான் சீடன். பகல் <உணவுவேளை வந்தது. அப்போது தனக்கு அளிக்கப் பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்துவிட்டான் சீடன். ஒரு கிண்ணத்தில் பசுமாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. சீடன் விழித்தான். குரு, புன் முறுவலுடன் சொன்னார்: பால், சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதா? சிஷ்யன் புதிய பாடம் கற்றான். |
|
|
|