|
குரு ஒருவர் தனக்குப் பின் தலைமைப் பொறுப்பை தன் நான்கு சீடர்களுள் யாரிடம் ஒப்படைப்பது என அறிய அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார். ஒரு பெட்டியைக் காண்பித்து, இதற்குள் என்ன இருக்கிறது என்பதை தனித்தனியே எழுதிக்காட்டுங்கள்! என்றார். பெட்டியை நன்கு கவனித்த நால்வரும், குரு கூறியது போலவே செய்தனர். அவற்றை வாங்கிப் பார்த்த ஞானி, ஒரு சீடனைத் தவிர மற்ற மூவரும் பொய் சொல்லி இருக்கிறீர்கள். அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு பதில், என்ன இருக்கும் என்று ஊகிப்பதில் தான் ஆர்வம் காட்டி இருக்கிறீர்கள். உள்ளே துணி வகைகள் என்றும், சுவடிகள் என்றும் உள்ளே ஒன்றுமில்லை என்றும் எழுதி உள்ளீர்கள். நான்காம் சீடன் தான் எனக்குத் தெரியாது என சரியாக எழுதியுள்ளான். அவ்வறு எழுத அவன் வெட்கப்படவில்லை. தவறாகச் சொல்வதைவிட, தெரியாது என்று ஒப்புக்கொள்வது தான் தலைமை வகிக்கத்தேவையான சிறந்த பண்பு! என்றார். |
|
|
|