|
ஒரு சமயம் ஜனக மகாராஜா யாக்ஞவல்கியரைப் பார்த்து, சுவாமி, ஒளி எங்கிருந்து வருகிறது? என்று கேட்டார். ஆதவன் உதயமானால் தானாகவே ஒளி வரும்! ஆதவன் இல்லாத இரவு நேரங்களில்? சந்திரனிடமிருந்து வருகிறது! சந்திரன் இல்லாத இரவில்? தீயிலிருந்து பெறலாம்! தீயில்லாத காலத்தில்? பேச்சிலே ஒளியைக் காணலாம்! பேச்சிற்கும் இடமில்லாத போது? மகாராஜா, இதுவரையில் நான் சொல்லிய சாதனங்கள் உண்மையான ஜோதியை உண்டாக்கக் கூடியவை இல்லை. ஆன்மா ஒன்றுதான் உண்மையான ஒளி, ஜோதி. அது அறிவு வடிவமானது. அதுதான் தானே விளங்கும் ஜோதி. மற்ற எல்லா ஒளிகளுக்கும் ஆதாரமான ஜோதி. ஆத்ம ஜோதி. அறிவாகிய ஒளி இயங்குவதால், அதுவே ஒளியைத் தரக்கூடியது. அது இருந்தால்தான் மற்ற ஒளிகள் பயன்தரும்? என்றார் யாக்ஞவல்கியர். |
|
|
|