|
குரு ஒருவர் தன் சீடர்களை நோக்கிக் கேட்டார். நாம் கோபப்படும் போது மிகச் சத்தமாகப் பேசுகிறோமே ஏன்? சீடர்கள் பலரும் பல விதமான பதில்களைக் கூற திருப்தி அடையாத குரு இறுதியில் தானே கூறினார். இருவர் கோபமாக இருக்கும்போது அவர்களின் உடல்கள் என்னவோ அருகில் இருந்தாலும் அவர்கள் உள்ளங்கள் தூரமாகிவிடுகின்றன. அதனால்தான் அவர்கள் சத்தமாகப் பேசிக்கொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அன்பானவர்கள் மிகவும் மெதுவாகப் பேசிக்கொள்வதும், இன்னும் நெருக்கமானவர்கள் பேசிக்கொள்ளாமலேயே உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதையும் பார்த்திருப்பீர்களே..! புதிய விளக்கம் பெற்றனர். சீடர்கள். |
|
|
|