|
அசோக வனத்தில் சீதையின் அவல நிலை கண்ட அனுமன் கொதித்தான். சீதையை அங்கிருந்த அரக்கியர் துன்புறுத்தியிருப்பதை உணர்ந்தான். அவனது கோபம் மேன் மே<லும் அதிகரித்தது. தாயே... தங்களை இந்த அளவுக்கு வாட்டிய அரக்கியர் கூட்டத்தை நசுக்கி அழிக்க என் கைகள் பரபரக்கின்றன.. தயவு செய்து தாங்கள் உத்தரவு கொடுங்கள்..! அன்னையே என்றார் அனுமன். ஆனால் சீதையோ சற்றும் சினமின்றி அமைதியாகப் பேசினாள். வானர வீரா... உன் கோபம் அர்த்தமில்லாதது. இந்த அரக்கியர் பாவம்.. இயல்பில் நல்லவர்களாக இருந்தா<<லும், அரசனான ராவணன் இட்ட <உத்தரவின்படி என்னை அச்சுறுத்தி கொடுமைப்படுத்துகிறார்கள். இவர்களை தண்டிப்பது முறையாகாது அனுமன் என்று கூறினாள் சீதை. அதைக் கேட்ட அனுமனின் சினம் சற்றுக் குறைந்தது. தாயே... எப்படி இருந்தாலும் இவர்கள் செய்வது தவறுதானே! அதற்காக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாமா? ராமதூதா... நீ சொல்வதுபோல் தவறு செய்தவர்களை தண்டிப்பதனால் உன்னையும், என்னையும், ஏன் அந்த ராமனையேகூட அல்லவா தண்டிக்க வேண்டும்? சீதை சொன்னதைக் கேட்ட அனுமன் அதிர்ந்தான். அன்னை சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரியாமல் விழித்தான்.
மறுபடியும் அனுமன்! தாயே... தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? ராமசந்திரமூர்த்தியும் தாங்களும் கூடவா தவறு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டான். சீதை அனுமனை அன்புடன் பார்த்தாள் நடந்ததை சொல்லத் தொடங்கினாள். வாயு குமாரா... அரசன் இட்ட பணியைச் செய்வது கடமை. அதனைச் செய்த அரக்கியரை தண்டிக்க நினைத்தது நீ செய்த குற்றம் அல்லவா! தாயே.. மன்னியுங்கள்! எனது குற்றத்தை விடுங்கள்.. நீங்கள் இருவரும் செய்த தவறுதான் என்ன அதைச் சொல்லுங்கள்..! என்றான் அனுமன். அஞ்சனை மைந்தா! ராவணன் எனும் கொடிய அரக்கனிடம், பதிவிரதையான தன் மனைவி சிக்கியிருக்கிறாள் என்பது தெரிந்ததும், உன் ராமன் தானே தேடி வந்து என்னைக் காப்பாற்றனும் அது இல்லாமல் தன்னுடைய ஆட்களை அனுப்பித் தேடி தாமதம் செய்து கொண்டிருக்கலாமா? அனுமந்த்ரா! ராமர் அந்தத் தவறையல்லவா செய்திருக்கிறார்.! என்று கூறினாள் சீதை. சீதை சொன்னதைக் கேட்டதும் அனுமன் சற்று நேரம் பேசாமல் திகைத்து நின்றான். பின்னர்..
தாயே... நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இவ்வளவு தர்மநியாயங்கள் தெரிந்திருக்கும் தாங்கள் என்ன தவறு செய்திருக்க முடியும்? என்று கேட்டான் அனுமன்! சீதை பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டுச் சொல்லத் தொடங்கினாள். மாருதியே! எந்தப் பெண்ணும் தன் கணவரைப் பற்றி பிறரிடம் குறைசொல்லிப் பேசக் கூடாது. ஆனால் தற்போது உனது வற்புறுத்தலுக்கு இணங்க ராமரைப் பற்றி நான் உன்னிடம் குறையாகச் சொன்னேன் அல்லவா? அதுதான் நான் செய்த தவறு. என்று கூறினாள் சீதை. தவறு செய்யாதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்பதையும், செய்த தவறை உணர்ந்து வருந்துவதும், அதனைத் திருத்திக் கொள்வதுமே அவசியம் என்பதை உணர்ந்த அனுமன் சினம் விட்டு, சிரம் தாழ்த்தி சீதையை வணங்கி விடைபெற்றான். |
|
|
|