|
ஓர் ஊரிலிருந்த இரு செல்வந்தர்கள் தனித் தனியே இரு கோயில்களைக் கட்டியிருந்தனர். ஒரு நாள் இருவரும் அவ்வூரிலிருந்த மகான் ஒருவரை அணுகி, எங்களில் எவரின் கோயில் சிறந்தது? என்று கேட்டனர். மறுநாள் கோயிலைப் பார்வையிட்ட மகான், இரண்டாவது செல்வந்தரின் கோயிலே சிறந்தது என்று தீர்ப்புக் கூறி, அதற்கான காரணத்தையும் விளக்கினார்: இருவரின் கோயிலும் பொருட்செலவு, கலைநுட்பம், கோயில் அமைப்பு என அனைத்திலும் சமமாக இருந்தபோதிலும், முதல் செல்வந்தர் முழுக்க முழுக்க அவரே செலவு செய்து கோயிலைக் கட்டியுள்ளார். எனவே அவர் மனதில் தமது கோயில் என்று செருக்கும் மமதையும் உள்ளது. இரண்டாவது செல்வந்தர் தமது சொந்த செலவில் கட்டிய போதிலும். ஒரு சிலரிடம் கொஞ்சம் பணம் வசூல் செய்துள்ளார். இது சிறிய தொகைதான் என்றாலும், அவர் மனதில் தமது கோயில் என்ற செருக்கும் பெருமையும் இல்லை என்று சொல்ல, கூடி இருந்தவர்கள் சரியான தீர்ப்பு என்று கரகோஷம் செய்தனர். |
|
|
|