|
செய்த நற்பலன்களின் காரணமாக சொர்க்கம் செல்லும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்தது. சொர்க்கத்தின் காவலன் அவரைத் தடுத்து நிறுத்தினான். இங்கே வருவோர் நான் வைக்கும் பரீட்சையில் வெற்றி பெற்றால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.. தெரியுமா? உனக்கு என்று வந்தவரிடம் காவலன் கேட்டான். இப்பகுதியின் சட்ட திட்டம் எதுவோ அதனை ஏற்று அதன்படியே ஏற்று நடக்கிறேன் காவலரே..! என்று வந்தவர் தன்மையாக கூறினார். சம்மதித்த அவரிடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினான் சொர்க்கத்தின் காவலன். சொர்க்கத்திற்கு உள்ளே செல்லும் அளவுக்கு நீங்கள் என்ன நற்செயல் செய்தீர்கள்? என்று காவலன் கேட்க! வந்தவர் நான் வாரம் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபடுவேன்..! என்று சொன்னார். தான் செய்த நல்ல செயல்களை வந்தவர் பட்டியலிட, அவற்றுக்கு உரிய மதிப்பெண்ணைச் சொன்னான் சொர்க்கத்தின் காவலன். நீங்கள் கோயில் சென்றதற்கு மூன்று மதிப்பெண் தரலாம். அடுத்து என்ன செய்தீர்கள்? என்று வினவினான்!
வந்தவரும் பொறுமையாக நான் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டினேன். என்று கூறினார். உடனே காவலாளி பிறகு என்ன செய்தீர் என்று மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தான். அன்னதானம் அளித்தேன்.... நோயாளிகளுக்கு உதவினேன்... சரி அதற்கு ஐந்து மதிப்பெண் தருவேன். அப்புறம்? இன்னும் பலப்பல நல்லகாரியங்களைச் சொல்லியும் அவருக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்காததால், யோசிக்கத் தொடங்கினார். நான் செய்த எல்லாவற்றையும் சொன்னாலும் உள்ளே செல்ல விடமாட்டார் போல் தெரிகிறதே... என்ன செய்வது? என்று மவுனமாக சிந்திக்க தொடங்கினார். சற்று கொஞ்சநேரம் யோசித்த அவருக்கு தனது தவறு என்ன என்று புரிந்தது. சொர்க்கத்தின் காவலரே.. என்னை மன்னியுங்கள் இதுவரை சொன்ன எல்லா நற்செயல்களையும் நான் செய்ய முடிந்தது என்றால் அதற்கு முழுமையான காரணம் இறைவனே. தெய்வத்தின் அருள் இல்லாவிட்டால் என்னால் இவற்றைச் செய்திருக்கவே முடியாது.
இதைக் கேட்ட உடனே சொர்க்கத்தின் கதவைத் திறந்தான் காவலன். மானிடா, நீ இப்போது உள்ளே செல்லலாம் என்று காவலன் கூறியதும்! வந்தவருக்கு ஒரே ஆச்சரியம் ஆ! நான் சொர்க்கத்திற்கு செல்லும் வழி கிடைத்தது என்று பெருமிதத்துடன் காவலனிடம் நன்றி தெரிவித்துவிட்டு, தெய்வத்தை மனதாரப் பணிந்தவாரே சொர்க்கத்தினுள் சென்றார் அவர். அய்யா, தானமோ, தருமமோ செய்வது பெரிதல்ல.. இறைவன் நமக்கு அளித்த வாய்ப்புதான் அது என்பதை உணர்ந்து, நான் செய்தேன் நான் செய்தேன் என்று பெருமைப்படாமல் அந்த வாய்ப்பினை அளித்த தெய்வத்துக்கு நன்றி சொல்வதே சொர்க்கத்திற்குச் செல்லும் வழி என்பதை உணர்ந்தேன்.. நன்றி..! இந்த கதைகளில் வருவதுபோல் மட்டுமின்றி இல்லாமல் நாமும் நம் வாழ்க்கையில் எந்தவொரு செயலலையும் தொடங்குவதற்கு முன் தெய்வத்தை வேண்டிதான் செய்கிறோம் அதுமட்டுமல்லாமல் கடவுளின் அருள் இல்லாமல் நம்மால் எந்தவொரு செயலையும் செய்யமுடியாது. மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் மனதில் நான் செய்தேன் என்னால்தான் முடியும் என்ற அகந்தையை வளர்த்துக் கொள்ளாமல் நமக்கு அருளிய கடவுள்தான் இதற்கு காரணம் என்று மனதார பிரார்த்தித்தாலே போதும் நம்மை இறைவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்.
|
|
|
|