|
செல்வந்தர் ஒருவர் மறைவிற்குப் பின் சொர்க்கத்திற்குப் போனார். அங்கேயிருந்த தேவதைகள் அவரை வரவேற்று சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பித்தனர். அங்கே அழகான மாளிகை ஒன்றைப் பார்த்து வியப்பு அடைந்த செல்வந்தர், இந்த மாளிகையில் தங்கி இருப்பவர் யார்? என்று கேட்டார். சில மாதங்களுக்கு முன் இறந்து போன <உங்கள் சமையல்காரர்தான் இதில் தங்கியுள்ளார்! என்றனர், தேவதைகள். பக்கத்திலேயே இருந்த சிறிய குடிசை ஒன்றைக் காட்டிய செல்வந்தர், இது யாருக்கு? என வினவினார். இதில்தான் நீங்கள் தங்கப் போகிறீர்கள் எனச் சொல்ல, அதிர்ச்சியுற்ற செல்வந்தர், நான் பூவுலகில் பெருந்தனவான் என்பது உங்களுக்குத் தெரியாதா? என கோபத்தோடு கேட்டார். அதற்கு தேவதைகள், நீங்கள் சொர்க்கத்தின் விதிமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூவுலகிலிருந்து என்னென்ன பொருள்களை இங்கே அனுப்பி வைத்தீர்களோ அவற்றை வைத்துத்தான் இங்கே உங்களுக்கான இருப்பிடம் கட்டப்படுகிறது. நீங்கள் அங்கே எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை வைத்து அல்ல! என பதில் தந்தன தேவதைகள். |
|
|
|