|
ஒரு துறவியை சந்தித்த இளைஞன், சுவாமி! நம்மிடத்துள்ள தோஷங்களை எவ்வாறு நீக்கலாம்? என்று கேட்டான். பூவிலிருந்து காய் உண்டாகி, கனி வளர்ந்து வெளிப்பட்டதும் மலரின் இதழ்கள் தாமாகவே கழன்று விழுந்து விடுகின்றன. அதுபோல, உன்னிடத்துள்ள தெய்வீக இயல்பு அதிகரிக்கும்போது உன்னுடைய மனித சுபாவத்திற்கான தோஷங்கள் தானாகவே மறைந்துவிடும்! என்றார் துறவி.
|
|
|
|