Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பயம் அவசியமா?
 
பக்தி கதைகள்
பயம் அவசியமா?

விதைக்குள் விருட்சம் என்ற வார்த்தைகளுக்கு ஆதாரமாக விளங்குவது பகவத் கீதையே! பகவத் கீதையை என்று சொல்வார்கள். கடவுளின் பாட்டுக்களாக அமைந்த பகவத் கீதையில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை எனலாம். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவம் அனைவரும் அறிந்ததே! ஆனால், எப்படி வாழ்வது என்பதைத் தெரிந்துகொண்டு வாழவில்லை எனில், வாழ்க்கை சாவதற்கே என்பதாக முடிந்துவிடும். ஆகவே, மனச் சாந்தியும் அடைந்து வாழ்க்கையைச் செவ்வனே வாழ வழிகாட்டும் பல்வேறு நூல்களில் முதன்மையானது பகவத் கீதை.

அர்ஜுனனின் தயக்கம்: குருக்ஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. கவுரவ- பாண்டவ சேனைகள் அணிவகுத்து நிற்கின்றன. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செலுத்திக்கொண்டு வரும் அர்ஜுனனின் ரதமும் அங்கே வருகிறது.

பாண்டவர்களில் வல்லமை மிகுந்தவன் அர்ஜுனன். அவனிடம் ஸ்ரீராமனின் கோதண்டத்துக்குச் சமமான காண்டீபம் எனும் வில் இருந்தது. தவங்கள் பல புரிந்து பிரம்மாஸ்திரம், வருணாஸ்திரம் போன்ற எண்ணற்ற அஸ்திரங்களைப் பெற்றிருந்தான் அவன். தர்மத்தைக் காக்க தன் உயிரைக் கொடுக்கவும் தயாரானவன் அவன். எல்லாவற்றுக்கும் மேலாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே தேரோட்டியாக அவனுடன் இருந்தார். ஆனால், யுத்தம் ஆரம்பமாகும் முன், திடீரென கோழையைப் போன்று புலம்ப ஆரம்பித்துவிட்டான் அர்ஜுனன். அவன் கண்கள் நீரைச் சுரந்தன. கை-கால்கள் நடுங்கின. அவனுடைய வில்லும் அம்புகளும் தரையில் விழுந்தன. வேரற்ற மரம் போல், ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து புலம்பினான் அவன்.

கிருஷ்ணா, வேண்டாம் இந்த யுத்தம். உற்றார் உறவினர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். குலதர்மத்தை மீறி பெரியோர்களைக் கொல்வது பாபமாகிவிடும். இதனால் ஏற்படும் புகழும் பெயரும் எனக்குத் தேவையில்லை. இந்த இழிசெயலைச் செய்ய எனக்குப் பயமாக இருக்கிறது என்று முற்றிலும் எதிர்மறையாக கிருஷ்ணரிடம் மன்றாடினான். இங்கே, அர்ஜுனனே சில தர்ம நியாயங்களை கண்ணனுக்கு எடுத்துக் கூறினான். பகவானின் உபதேசத்தைப் பெற வேண்டிய அர்ஜுனன், அவருக்கே உபதேசம் செய்துகொண்டிருந்தான். இதனால் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு அர்ஜுன விஷாத யோகம் என்று பெயர். முடிவில், பயமும் துயரமும் மேலிட கீழே விழுந்த வில்லையும் அம்பையும் கையில் எடுக்காமல், க்ஷத்திரியனுக்கே உரிய துணிவை இழந்து, திகைத்து நின்றான்.  தகுதியில்லாத ஒருவன் தயங்கித் தவித்தால், அதற்குக் காரணம் உண்டு. எல்லாத் தகுதிகளும் பெற்றவன் ஏங்கித் தவித்துக் கூனிக் குறுகி நின்றால், அதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட கிருஷ்ணர் சற்றுக் கோபமாகவே பதிலுரைத்தார்... அர்ஜுனா! உனது பயமும் கோழைத்தனமும் க்ஷத்திரியனுக்கு உரிய தர்மம் ஆகாது. போர் தொடங்கிவிட்டது. உன்னைப் போன்று மனம் கலங்குபவர்கள், இந்தக் கூட்டத்தில் இல்லை என நினைக்கிறேன். யோசித்து முடிவு செய்திருக்க வேண்டும். முடிவு செய்து போர்க்களத்தில் இறங்கிய பிறகு, யோசித்துக் காரணங்களைக் கண்டுபிடித்து, முடிவை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வது, வீரனுக்கு அழகல்ல! என்றார்.

இதனையே, எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்கிறார் திருவள்ளுவர்.

ஸாங்கிய யோகம்!

பகவத்கீதையின் 2-வது அத்தியாயத்தில், ஸாங்கிய யோகம் என்பது தத்துவங்களின் அடிப்படையில் பகவானின் உபதேசம் ஆரம்பமாகிறது. அர்ஜுனனின் தயக்கத்துக்கு ஆதாரமான காரணங்களை யூகித்தார் பகவான்.

பற்று, பாசம், நன்றியுணர்வு!

பீஷ்மர் முதலான உறவினர்களும், குருநாதர் துரோணரும் அல்லவா எதிரிகளாக எதிரில் நிற்கிறார்கள்! அவர்கள் மிதான நன்றியுணர்வு அர்ஜுனனிடம் மேலோங்கி நின்றது. அவர்களை எப்படிக் கொல்வது? ஒருவேளை, அவர்களால் தானும் கொல்லப்படலாம். இல்லையென்றாலும் தன் சகோதரர்களில் வேறு யாரெனும் கொல்லப்பட்டால், அந்தத் துயரத்தை எப்படிச் சகித்துக்கொள்வது? இப்படி, அர்ஜுனனை வாட்டிய பய உணர்வுகளைப் புரிந்துகொண்டு கண்ணன் தன் உபதேசத்தைத் தொடங்கினார்.

பயம் அவசியமா?

மனித வாழ்க்கைக்கு பயம் தேவையா? ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க பயம் வேண்டாமா? பாப தோஷங்களுக்கு பயப்படு. அப்போது நீ தூய வாழ்க்கை வாழ வழி ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படியெனில், பயம்  அவசியம்தானே என்று தோன்றும். பயம் என்ற சுபாவம் மனித உடலிலும் மனத்திலும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தால், அது ஒருவனது முன்னேற்றத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது புலனாகும்.

இன்றைய உலகில், பலர் பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படுவது இல்லை; தேவையில்லாத விஷயங்களுக்கு பயப்படுகின்றனர். பெரும்பாலானோர் பயப்படுவது பொருளாதாரத்தைப் பற்றித்தான். மேலும், தனி மனிதர்களுகிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்வதிலேயே பயம் இருக்கிறது. சில நேரம், அனுபவத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் பயம் ஏற்படுகிறது. ஒரு தடவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு, அதனால் வயிற்று நோய் ஏதேனும் ஏற்பட்டுவிட்டால், பிறகு அந்த ஹோட்டலின் பெயரைக் கேட்டாலே ஒருவித பயம் ஏற்படுகிறது.

இப்படி, எல்லாவிதமான பய உணர்ச்சிகளும் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஒருவருக்கு இருளைக் கண்டு பயம் எனில், மற்றொருவர் அதே இருளில் எதையும் செய்து முடிக்கும் திறமை உள்ளவராக இருப்பார். பயம் என்பது எதிர்மறை உணர்வு. அது ஒரு எதிர்மறை எண்ணம் என்று எண்ணினால், அது மறைந்துவிடும்; அல்லது, மாறிவிடும். பொதுவாக, மானிடர்களின் பயம் உடல் நலம் பற்றியும், மரணம் பற்றியுமே மேலோங்கி நிற்கிறது. மரணத்தைக் கண்டு நாம் பயப்படுவதால் நமக்கு மரணம் நிகழாமல் போய்விடுமா, என்ன? மானிட வாழ்வில் நிச்சயமான ஓர் எதிர்கால நிகழ்வு மரணம். எனவே, அதைப் பற்றிய பயம் நீங்க வேண்டும். குரு க்ஷேத்திரத்தில் அர்ஜுனனைப் பீடித்த ஒரு பய உணர்வு இந்த மரண பயம்தான். இவர்களை நான் கொன்றுவிடுவேன்; அல்லது, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற பயம்தான்.

இந்த பயத்தைப் போக்கவே, பகவான் ஆத்ம போதத்தை உபதேசித்தார். உடல்கள் அழியலாம்; ஆத்மா அழியாது. அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மா இறவாதது, பிறவாதது, வளராதது, கொல்லப்படாதது, என்றும் குறையாதது. உடலானது, ஓர் ஆடையை மாற்றி மற்றொன்றை அணிவது போன்று, ஆத்மா தன் உடலை மாற்றிக்கொள்ளவல்லது.

ஆத்மா வெட்டுப்படாது, தீயில் வேகாது, மழையில் நனையாது, வெயிலில் வேகாது. அது ஆடாதது, அசையாதது, நிலையானது. ஆத்மாவைப் புலன்களால் அறிய முடியாது. சிந்தனையில் கட்டுப் படுத்த முடியாது. உன்னுள்ளே உறைந்திருக்கும் ஆத்மாதான் இறைவன். அஹம் பிரஹ்மாஸ்மி என்பது தத்துவம். ஆகவே, இவர்களை எல்லாம் யுத்தத்தில் அழிக்கப் போகிறோமே என்று எண்ணிக் கலங்காதே! நீ வெறும் கருவிதான் என்றார் கண்ணன். மனித உடலுக்குக் குழந்தைப் பருவம், இளமை, யௌவனம், மூப்பு உண்டாவது போலவே, ஓர் ஆத்மா வேறு உடலில் வேறு பருவங்களை உண்டாக்கிக்கொண்டு வாழ முடியும். இல்லாதது இருப்பதில்லை; இருப்பது இல்லாமல் போவதில்லை. இதையே விஞ்ஞானிகள் என்று சொன்னார்கள். உதாரணமாக, தண்ணீரைக் கொதிக்கவைத்தால் நீராவியாகும். அப்போது, தண்ணீர் மறைந்துவிடும். நீராவி குளிர்ந்தால், அது மீண்டும் தண்ணீராகும். அதை மேலும் குளிர வைத்தால் ஐஸ் கட்டியாகும். ஆத்மாவும் அதுபோலத்தான். எனவே தான், அர்ஜுனா! ஏதோ ஒன்றை நீ அழிப்பதாகவோ, உருவாக்குவதாகவோ எண்ணிக் குழப்பம் அடையாதே! என்றார் பகவான் கிருஷ்ணர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar