|
அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்திமுலமனோஷதம் அயோக்ய: புருஷோ நாஸ்தி யோஜகஸ்தத்ர துர்லப: என்று ஒரு ஸுபாஷிதம் (நல்வார்த்தைகள் அடங்கிய ஸ்லோகம்).இதன் விளக்கத்தைக் கேளுங்கள். இந்த உலகத்தில்உபயோகம் இல்லை என்று எதுவுமே கிடையாது. நம்முடைய திறன் நமக்கே தெரிவதில்லை. அந்த பராக்ரமசாலிஅனுமானுக்கே, அந்த பிரம்மாண்டமான கடலைத் தாண்டி தன்னால் பறந்து செல்லமுடியும் என்று தெரியவில்லையே.. அப்படி இருக்க நமக்கு, நம்மிடமுள்ள திறமை தெரியவில்லையானால், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அந்த ஜாம்பவான், அனுமானால் இந்த ராமர் காரியத்தை நடத்த முடியும் என்று விவரமாக எடுத்து சொன்ன உடனேயே, ஜாம்பவானுக்கு நன்றி கூறி, இப்போதே புறப்படுகிறேன் என்று தாவி பறக்க ஆரம்பித்த ஆஞ்சநேயன், நமக்கு எல்லோருக்கும் எவ்வளவு நம்பிக்கை தருகிறான். அதே நேரம், அந்த ஜாம்பவானை நாம் மறக்க முடியுமா?மனிதர்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வெளிப்படுத்தி, பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த உதவி செய்யும் ஆக்குனர்கள் நமக்கு எப்பவும் தேவை. ஒவ்வொரு எழுத்திற்கும் மனதைக் கவரும் சக்தி உண்டு.
எழுத்துக்கள் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து தோன்றியவை. எவ்வளவு லட்சக்கணக்கான வார்த்தைகள் இந்த எழுத்துக்களில் இருந்து முளைத்து இன்னும் பரவிக்கொண்டு இருக்கிறது. எழுத்தாள ஜாம்பவான்கள்,எழுத்துகளை நன்கு பயன்படுத்தியதால் தான், நல்ல காவியங்கள் உருவாகின. அதேபோல, ஒவ்வொரு வேரிலும் ஒவ்வொரு மருத்துவ சக்தி இருக்கிறது. அந்த சக்தியை அறிந்து, பயன்படுத்தும் மருத்துவஜாம்பவான்கள் எவ்வளவோ பேர்இருக்கிறார்கள். சஞ்சீவி மலையை அனுமார் கொண்டுவந்து, ராம லட்சுமணர் இருவரையும் மூர்ச்சையில் இருந்து விடுவித்தது அந்த மூலிகைகள் தானே? நாம் எல்லோருமே ஜாம்பவான்கள் தான்! மற்றவர்களை உற்சாகப்படுத்தி. அவர்கள்திறமைகளை வெளிப்படுத்த, நாம் உதவிசெய்யலாம். அது மட்டுமல்ல! யாரையும்அதைரியப்படுத்தவோ, “உதவாக்கரை என்று தள்ளி வைக்கவோ கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் திறன் உள்ளவன் என்பதை இந்த ஸுபாஷிதம் வலியுறுத்துகிறது. இதை நாம் மனதில்எப்பொழுதும் நிறுத்தி, ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துவோம். |
|
|
|