|
ராமானுஜர் திருப்பதியில் இருந்த தன் தாய் மாமனார் திருமலை நம்பியின் வீட்டுக்குச் சென்றார். நம்பிக்கு பணிவிடை செய்து வந்த கோவிந்த பட்டர் மீது ராமானுஜருக்கு ஈடுபாடு உண்டானது. ஒருநாள் கோவிந்த பட்டர், ஒரு பாம்பின் வாயில் கை வைத்திருப்பதைக் கண்ட ராமானுஜர் “பட்டரே! என்ன செய்கிறீர்கள்?” என்று பதறினார். நாக்கில் முள் குத்தி இந்த பாம்பு அவதிப்படுகிறது,” என்று சொல்லி முள்ளை எடுத்து அதைக் காப்பாற்றினார். பாம்பிடம் கூட கருணை காட்டிய பட்டர் மீது ராமானுஜருக்கு மதிப்பு கூடியது. ஓராண்டுக்குப் பின் ராமானுஜர் காஞ்சிபுரம் கிளம்பினார். திருமலை நம்பி அவரிடம், “ராமானுஜா.. என் வீட்டுக்கு வந்த உனக்கு பரிசு ஏதும் தர முடியவில்லையே,” என வருந்தினார். அதற்கு ராமானுஜர்“கோவிந்தப் பட்டரை பரிசாகத் தந்தால், என்னோடு அழைத்துச் செல்வேன்,” என்றார் ராமானுஜர். திருமலை நம்பிகளும் அவரை அனுப்பி வைத்தார். |
|
|
|