|
சீடன் ஒருவன், தர்மத்தைக் கடைப்பிடித்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறீர்கள். ஆனால் சிலர் அதர்மத்தை மட்டுமே செய்தும் நன்றாக வாழ்கிறார்களே அது எப்படி? என்று குருவிடம் கேட்டான். அதற்கு குரு, மரத்தில் இருக்கும் வரைதான் இலை செழித்திருக்கும். அது தர்மம். அதே இலை மரத்திலிருந்து உதிர்ந்துவிட்டால் சில நாட்கள் கழித்துத்தான் வாடும். அதுபோல அதர்மத்தைப் பின்பற்றுபவர்கள் சில காலம் நன்றாக வாழ்வர். பின்னர் அழிந்து போவர். நாம் தர்மத்தைக் காத்தால் அது நம்மைக் காக்கும் என்றார். |
|
|
|