|
ஒருநாள் குருகுலத்தில், ஒருவருக்கு மகிழ்ச்சி எப்போது வரும்? எனச் சீடன் ஒருவன் கேட்டான். பதிலாக குரு, எல்லாச் சீடர்களிடமும் சிறு சிறு ஓலைகளைக் கொடுத்து, அதில் அவரவர் பெயரை எழுதி, ஒரு பானையில் போடச் சொன்னார். எல்லோரும் அவ்வாறு செய்த பின், பானையை சற்று குலுக்கிவிட்டு, ஒவ்வொருவரும் தத்தம் பெயரிலுள்ள ஓலையை எடுக்குமாறு கூறினார். அனைவரும் ஒரே சமயத்தில் தேட, யாருக்கும் அவரவர் பெயருள்ள ஓலை கிடைக்கவில்லை. இப்போது குரு, ஓலையை பானையிலிருந்து எடுத்து யார் பெயர் எழுதியுள்ளதோ, அவரிடம் அதைத் தரும்படி கூறினார். சில நிமிடங்களில் அவரவர் பெயருடைய ஓலை அனைவருக்கும் வந்தது. அவர்கள் முகங்களிலிருந்து பரபரப்பும், கவலையும் விலகி, மகிழ்ச்சி உண்டாயிற்று. அப்போது குரு, பிறருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்யும்போது, நமக்கு வேண்டுவனவும் தானாகவே நடந்துவிடுகிறது. ஆகவே பிறருக்கு உதவுவதே நாம் மகிழ்ச்சியை பெறுவதற்கான வழிமுறை என்று சொன்னார். |
|
|
|