|
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் துறவி ஒருவர் இருந்தார். அவர் மலையை விட்டு கீழே இறங்கியதில்லை. அதற்கான காரணத்தை அறிய விரும்பினார் ஒரு பக்தர். துறவியிடமே கேட்டும் விட்டார். துறவி அவரிடம், “முருகனருளால் இங்கேயே எனக்கு எல்லாம் கிடைக்கிறது. கிடைத்தது எதுவானாலும் சாப்பிடுவேன்,” என்றார். “எதை வேண்டுமானாலும் என்கிறீரே! சுண்ணாம்பைச் சாப்பிடுவீரா?” என்று விளையாட்டாகக் கேட்டார் பக்தர். “கொடு... சாப்பிடுகிறேன்,” என்றார் துறவி. பக்தரும் ஒரு மண்சட்டியில் சுண்ணாம்பை எடுத்துச் சென்று துறவியிடம் கொடுத்தார். துறவி அங்கிருந்த செடி கொடிகளுக்குள் சென்று, சிறிது நேரத்தில் பச்சிலையுடன் திரும்பினார். அதன் சாறை மண்சட்டியில் பிழிந்தார். குபுகுபுவென நுரைத்து அடங்கியது. அதை துறவி உண்ண ஆரம்பித்தார். பக்தர் பயத்தில், “சுவாமி... இதை உண்ணாதீர்கள். குடல் வெந்து போகும்” என்று தடுத்தார். துறவியோ, “பயம் வேண்டாம். நீயும் சாப்பிடலாம்” என்று சொல்லி கொடுத்தார். அந்த பச்சிலை, சுண்ணாம்பு வெண்ணெயாக மாற்றியிருந்தது. அந்த துறவியே சென்னிமலை சித்தர்’ என்னும் பெயர் பெற்றார். |
|
|
|