Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எல்லாம் பகவான் சித்தம்!
 
பக்தி கதைகள்
எல்லாம் பகவான் சித்தம்!

மகாபாரத யுத்தம். தன் மகன் அபிமன்யூவின் இறப்புக்கு அநியாயமாகத் துணை இருந்த ஜயத்ரதனை சூரிய அஸ்தமனத்துக்குள் வதைப்பேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்து களம் இறங்கினான் அர்ஜுனன். அதனால் போர்க்களத்தில் மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்குக் காவலாக இருந்தனர். மாலைவேளை முடியும் நேரம் நெருங்கியும் ஜயத்ரதன் இருக்கும் இடம்கூட தெரியவில்லை. அர்ஜுனனின் படபடப்பு அதிகரித்துக் கொண்டே போனது. கிருஷ்ணா... சூரியன் அஸ்தமிக்கப் போகிறதே! ஜயத்ரதனை எப்படிக் கொல்வேன்? என்றான் அர்ஜுனன். மேலும் சில நொடிகள் நகர்ந்தன. தன் கையில் இருந்த வில்லையும் அம்பையும் தளர்த்திவிட்டு, பகவானே உனக்குத் தெரியாதது இல்லை. எல்லாம் உன் சித்தப்படியே நடக்கின்றன. எது நல்லதோ அதைச் செய்! என்று வணங்கினான் அர்ஜுனன். அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணர், தமது சக்ராயுதத்தை ஏவி, சூரியனை மறைத்தார்.

மாயவன் மாயை அது என்று அறியாத ஜயத்ரதன் குதூகலித்தான். கவுரவர்கள் கேலிக்குரல் எழுப்பினார்கள். சூரியன் அஸ்தமித்துவிட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளிக்க வேண்டியதுதான்! என்ற எண்ணத்தோடு, மறைவிடத்தில் இருந்து தலையை வெளியே நீட்டினான், ஜயத்ரதன். பகவான் அர்ஜுனனைப் பார்த்து, அதோ பார், ஜயத்ரதன் தலை தெரிகிறது! ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, அது கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்தில் ஜபம் செய்து கொண்டிருக்கும் விருத்தட்சரனின் மடியில் விழும்படி அம்புகளாலேயே தள்ளு! என்றார். அர்ஜுனன் அப்படியே செய்தான். அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததைக் கவனிக்கவில்லை. பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்தபோது, தனது மடியில் ஏதோ கனமாக இருப்பதாக உணர்ந்து அதைக் கீழே தள்ளினார். ஜயத்ரதனின் தலை பூமியில் விழுந்ததும், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.

அதிர்ந்துபோன அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்தான். அவனது பார்வை கேட்ட கேள்விக்கு விடை சொல்லலானார் பகவான். ஜயத்ரதனின் அப்பாதான் விருத்தட்சரன். தன் கோரமான தவப் பயனால் ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஓர் அசரீரி, உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப்படுவான். அதேசமயம் மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால், அவன் தலை அறுபட்டு மாள்வான்! என்றது. அதைக் கேட்ட விருத்தட்சரன், எவன் என் பிள்ளையின் தலையைக் கீழே விழச்செய்கிறானோ, அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்! என்று சாபமிட்டிருந்தார். பார்த்தா, உன்னால் அறுபட்ட அவன்தலை கீழே விழுந்திருந்தால், உன் தலை வெடித்துச் சிதறியிருக்கும். அதனால்தான் அதனை அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியிலேயே விழும்படி தள்ளச் சொன்னேன்! கிருஷ்ணர் புன்னகைக்க, அர்ஜுனனின் கண்களில் இருந்து நீர் கசிந்தது. எந்த ஒரு செயலையும் நாமாகவே செய்துவிடலாம் என நினைத்து என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், சூழ்ச்சிகள் செய்தாலும், சாமர்த்தியமாக நடந்துகொண்டாலும் அதன் முடிவை நம்மால் தீர்மானிக்க முடியாது. எல்லாவற்றையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான்தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டு, பகவானே! எல்லாம் உன் சித்தம். எது நல்லதோ, அதைச் செய்  என்று சொல்லி, அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை ஆகிவிடும். அவன் நமக்கு நல்லதையே செய்வான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar