|
ஓரிடத்தில் கடவுளை பற்றிய சர்ச்சை நடந்துகொண்டிருந்தது. அப்பேது அங்கே வந்தார் ஒரு துறவி. எல்லாரும் அவரிடம் தங்கள் வாதத்தை முன் வைத்து தீர்ப்புக்கேட்டார்கள். துறவி விடை ஏதும் சொல்லாமல் மவுனமாகப் புறப்பட்டார். அவரை வழிமறித்து மீண்டும் கேட்டார்கள். விருந்துக்கூடம் ஒன்றில் ஏராளமானவர்கள் சாப்பிடத்தயாராக அமர்ந்திருக்கிறார்கள். அங்கே சத்தம் அதிகமாக இருக்கிறது. அதே சமயம், ஒவ்வொரு உணவு வகையாகப் பரிமாற ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் சத்தம் குறைகிறது. முழுவதும் பரிமாறப்பட்டதும், எல்லோரும் அதனை ரசித்து, ருசித்து உண்ண ஆரம்பித்ததும் கூச்சலும் முழுமையாக அடங்கி, நிசப்தம் நிலவத் தொடங்கிவிடுகிறது. இப்படித்தான்.... கடவுளை முழுமையாக அனுபவித்து பக்தியில் மூழ்கி இறைவனை ரசிக்க ஆரம்பித்து விட்டார்களானால், இந்த விவாதம்.... சர்ச்சை எல்லாம் ஓய்ந்து விடும்! |
|
|
|