|
ஒரு குருநாதர் தன் சீடர்களிடம், வைகுண்டம் எங்கிருக்கிறது தெரியுமா? என்று கேட்டார். தலைமை சீடன், சூரிய மண்டலம், நட்சத்திர மண்டலம் இரண்டுக்கும் அப்பால் வெகு தொலைவில் இருக்கிறது, என்றான். குருநாதர் சிரித்தார். சரி..... கைலாயமாவது எங்கிருக்கிறது தெரியுமா? என்று ÷ கட்டார். அதற்கு இன்னொரு சீடன், குருநாதா! வைகுண்டத்திற்கு நேர் எதிரில் உள்ளது என்றான். குருநாதர் மீண்டும் சிரித்தார். சீடர்கள் விழித்தனர். நீங்கள் சொல்வது தவறு. கூப்பிடு துõரத்தில் வைகுண்டமும், கைக்கு எட்டும் துõரத்தில் கைலாயமும் இருக்கிறது, என்றார். சீடர்களுக்கு அவர் சொன்னது சரிவர விளங்கவில்லை. கஜேந்திரன் என்னும் யானை முதலையிடம் சிக்கிய போது ‘ஆதிமூலமே என்று பெருமாளை அழைத்தது. குரல் கேட்டதும் கருட வாகனத்தில் ஓடோடி வந்தார் பெருமாள். அது போல மார்க்கண்டேயர் மீது எமன் பாசக்கயிறை வீசியதும், கைக்கு எட்டிய துõரத்தில் இருந்த லிங்கத்தை கட்டியணைத்தார். பக்தனுக்கு உதவ சிவன் அந்த லிங்கத்திலிருந்தே வெளிப்பட்டு எமனை உதைத்தார். வைகுண்டமும், கைலாயமும் எங்கோ இல்லை. பூலோகத்தில் கூப்பிடு துõரத்திலேயே உள்ளன என்பதை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன, என விளக்கினார் கு ருநாதர். |
|
|
|