|
விஷ்ணு பக்தரான கனகதாசர் என்பவர், வியாசராய குருவிடம் படித்தார். கனகதாசருக்கு கடவுளிடம் பேசும் சக்தி இருந்தது. இதையறிந்த வியாசரா யர் ஒருநாள், கனகதாசா! நம் குருகுலத்தில் யார் யாரெல்லாம் வைகுண்டம் செல்ல தகுதியானவர்கள் என்பதை கடவுளிடம் கேட்டு சொல், என்றார். குருநாதா! இன்றிரவே கேட்டு நாளை பதில் சொல்கிறேன் என்றார் கனகதாசர். மறுநாள் கனகதாசரின் பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். விய õசராயர் ஒவ்வொரு சீடராக காட்டி, வைகுண்டம் போவாரா? என்று கேட்டார். இல்லை என சொல்லிக் கொண்டே வந்தார் கனகதாசர். கடைசிய õகநான் போவேனா? என்று தன்னையே கேட்டார் வியாசராயர். அதற்கும்,இல்லை என்றார் கனகதாசர். திகைப்பில் ஆழ்ந்த குருநாதர்,நீ போவாயா? என்று கேட்டார். அதற்கும்,‘நான் போனால் போவேன் என்றார் தாசர். ஆணவத்தின் உச்சத்தில் கனகதாசர் இப்படி பேசுவதாக அனைவரும் எண்ணினர். அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவர், ‘நான் என்ற அகந்தை எண்ணம் நம்மை விட்டு போனால் மட்டுமே வைகுண்டத்தை அடைய முடியும் என்பது பெருமாளின் பதில். அதையே ‘நான் போனால் என்று குறிப்பிட்டேன் என்றார். |
|
|
|