|
அரசன் ஒருவன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான். அப்போது வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டு ஒன்றை கவ்வியவாறு வேகமாகப் பறந்து சென்றது. அந்த இறைச்சித்துண்டைப் பறிப்பதற்காகப் பல பறவைகள் அப்பருந்தைத் தாக்கியவாறு பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் இறைச்சித் துண்டைக் கீழே நழுவ விட்டது பருந்து. உடனே, வேறொரு பறவை அதைக் கவ்விக் கொண்டது. இப்போது எல்லாப் பறவைகளும் அந்தப் பருந்தை விட்டுவிட்டு, இறைச்சித் துண்டை கவ்விய பறவையை விரட்ட ஆரம்பித்தன. இறைச்சியை நழுவ விட்ட பருந்து இப்போது நிம்மதியாகப் பறந்தது. சக்கரவர்த்தியின் மனதில் தெளிவு பிறந்தது. இறைச்சித் துண்டைப் பற்றியிருந்த பறவை தாக்கப்படுவதைப் போல உலகப் பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம் தாக்குகிறது. இறைச்சியை விட்டுவிட்டு பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலகப் பற்றை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகின்றனர் என உணர்ந்தான் அரசன். |
|
|
|