|
புத்தர் துறவறம் ஏற்றதும் அவரைப் பார்க்க வந்த பாவிகள் கூட மனம் திருந்தினர். சிலர் அவரைப் பின்பற்றி துறவறமே பூண்டனர். சிலர் அவரயே தெய்வமாக எண்ணி வழிபடத் துவங்கினர். இதனால் தேவர்களுக்குரிய யாகங்கள் நின்று போயின. தேவர்களுக்கு யாகங்கள் மூலமே உணவு கிடைக்கும். அந்த உணவின்றி அவர்கள் சிரமப்பட்டனர். தாங்கள் அழிந்து போவோம் என்று பயந்தனர். புத்தரை அழிக்க கங்கணம் கட்டினர். அவர்கள் பூலோகம் வந்து புத்தரிடம், “புத்த பெருமானே! நாங்கள் ஒரு யாகம் செய்ய இருக்கிறோம். அது பூலோகத்தில் துõய்மையான இடமாக இருக்க வேண்டும். அந்த இடம் உமது மார்பு தான். அதில் யாககுண்டம் அமைத்து தீ மூட்ட அனுமதிக்க வேண்டும்,” என்றனர். தீயிட்டு அவரைக் கொன்று விட வேண்டும் என்பது தேவர்களின் திட்டம். புத்தரும் ஒப்புக்கொண்டார். யாகம் துவங்கியது. தீ மூட்டப்பட்டதும் புத்தரின் முகம் முன்பை விட அந்த ஜூவாலையில் ஜொலித்தது. தேவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர். அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அப்போது அசரீரி ஒலித்தது. “ஏன் இந்த வீண் முயற்சி? மனத்துõய்மை உள்ளவர்களை யாராலும் அழிக்க முடியாது,” என்றது அந்தக்குரல். தேவர்கள் தலைகுனிந்தனர். மனத்துõய்மை உள்ளவர்கள் முன் தெய்வசக்தி கூட மண்டியிட்டு தான் தீர வேண்டும். |
|
|
|