|
அரசமரம் பிள்ளையார் கோவிலில் இருந்த துறவி பிச்சை எடுத்து சாப்பிடுவார். ஒருநாள் துறவிக்கு ஒரு வீட்டில் சுவையான பருப்புக் கீரையும், சோறும் கொடுத்தனர். அதை விருப்பமாக சாப்பிட்டார் துறவியின் மனம் அந்த உணவின் சுவையில் மூழ்கி விட்டது. மறுநாளும் துறவி வருவார் என அந்தப் பெண் நினைத்தாள். ஆனால் அவர் வரவில்லை. மாலையில் அவள் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றாள். மரத்தடியில் பட்டினியாக இருந்த துறவியிடம், “ ஐயா! இன்று ஏன் பிச்சை ஏற்க வரவில்லை? நேற்று அளித்த உணவு பிடிக்கவில்லையா?” என்று கேட்டாள். சிரித்த துறவி,“ அப்படி இல்லையம்மா! என்னைத் திருத்திக் கொள்ளவே பட்டினி கிடந்தேன். நேற்று சாப்பிட்ட பருப்புக்கீரை சுவையாக இருந்ததால் மீண்டும் சாப்பிட ஆசை வந்து விட்டது. துறவிக்கு அது அழகல்லவே...! அதனால் தான் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாக இந்த விரதம், ” என்றார்.
|
|
|
|