|
பக்தன் ஒருவன் கடவுளை அணுகித் தனக்குச் சத்தியத்தை போதிக்கும்படி வேண்டினான். அப்போது நல்ல கோடை காலம். கடவுளுக்கு ஒரே தாகம். பக்தனை நோக்கி முதலில் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்றார். அவன் ஒரு வீட்டுக் கதவைத் தட்டினான். அழகான பெண்ணொருத்தி கதவைத் திறந்தாள். முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் கொண்டனர். கொஞ்ச நாட்களில் திருமணமும் செய்து கொண்டனர். குழந்தைகள் பிறந்தன. காலம் ஓடியது. ஒருநாள் பெரு மழை பொழிந்தது. பிரளய வெள்ளம் பெருக்கெடுத்தது. மனிதனின் வீடும் தண்ணீரில் மூழ்கியது. கடவுளே என்று கூப்பாடு போட்டான். கடவுள் தோன்றினார். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான். அதுசரி, சற்று நேரத்துக்கு முன்பு நான் உன்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டேனே என்ன ஆயிற்று? என்று திருப்பிக் கேட்டார் கடவுள். |
|
|
|