|
குருவின் பேச்சைக் கேட்காமலேயே, குருகுலவாசம் முடிந்து விட்டதெனக் கூறி, தலைக்கனத்துடன் சீடன் ஒருவன் வெளியேறினான். தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் அவனுக்கு தலைக்கேறியிருந்தது. ஒரு சமயம் கிராமம் ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்த அவன், மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைப் பார்த்து, நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்? என்றான். சிறுவன் உடனே, கேளுங்கள்! என தைரியமாகக் கூற, சீடனுக்கோ வியப்பு. இந்த தைரியம் இவனுக்கு எப்படி வந்தது? ஏனப்பா! நான் கேள்வி கேட்கப் போகிறேன் என்றதும் உன்னிடம் தயக்கமோ, அச்சமோ ஏற்படவில்லையே?
சிறுவன், உலகில் எல்லாம் தெரிந்தவரும் இல்லை. ஒன்றுமே தெரியாதவரும் இல்லை. நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால், சொல்லப் போகிறேன். தெரியாவிட்டால் உங்களிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இதில் அச்சமோ தயக்கமோ எதற்கு? என்றான். மாடு மேய்க்கும் சிறுவனுடைய மனநிலை, கலக்கமற்ற துணிச்சல் சீடனுக்கு புதிராக இருந்தது. கேள்விகளை ஆரம்பித்தான். உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது? சூரியஒளி. அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லை! உலகில் சிறந்த நீர் எது? சிவன் சிரசில் இருந்தும், விஷ்ணுவின் பாதத்தில் இருந்தும் பெருகி வரும் கங்கை நீர். அதில் நீராடுபவர்களுக்கு மோட்சம் அளிக்கும் ஆற்றல் கொண்டது. அந்த கங்கை நீரைவிட சிறந்த நீர் வேறு எது இருக்க முடியும்? இதைக் கேட்டவுடன், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற சீடனின் அகம்பாவம் நீங்கியது. குருவைத்தேடி மீண்டும் ஆசிரமம் சென்றான். |
|
|
|