|
கிறிஸ்து பிறப்பதற்கு முன் பெர்சியாவின் மாமன்னனாக விளங்கிய சிறப்பு வாய்ந்த டாரியாஸ் (கி.மு.521 - 485) என்ற மன்னன் தான் அது. அவனது அரசுரிமையை ஒரு குதிரை வாங்கிக் கொடுத்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? பெர்சியாவின் மன்னன் ஸ்மர்டிஸ் இறந்ததும், அரியணைக்குப் பலத்த போட்டி ஏற்பட்டது. முடிவிலே போட்டியிட்ட எழுவருக்குமிடையே ஒரு பந்தயம் வைக்கப்பட்டது. அரச பதவிக்கு ஆசைப்படும் ஏழு பேரும், குதிரை மீது ஏறிக்கொள்ள வேண்டியது. நகரின் கோட்டைச் சுவருக்கு வெளியிலிருந்து கிளம்பி விடியும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்த ஏழு பேரும் வந்து சந்திக்க வேண்டும். இரவு முழுவதும் குதிரை ஓட்டம். யாருடைய குதிரை குறிப்பிட்ட இடத்திற்கு முதலாவதாக வருகிறதோ அவர்களே பெர்சியாவின் மன்னர் என்று முடிவு செய்யப்பட்டது. பந்தயத்தில் டாரியஸின் குதிரை டாரிஸை முதலில் கொண்டு வந்து தன் எஜமானனைப் பெரிய சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாக்கியது.
|
|
|
|