|
வேதத்தை தெளிவாக கற்ற சுவேதகேது என்பவனிடம், அவனது தந்தை உத்தாலகர்,“ வேதம் படித்த நீ, கடவுளைப் பற்றி தெரிந்து கொண்டாயா? அவர் இருப்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா? ” என்று கேட்டார். சுவேதகேதுவுக்கு இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. உடனே உத்தாலகர் ஒரு மண் கலயத்தில் தண்ணீர் எடுத்தார். அதில் கையளவு உப்பை இட்டு கலக்கினார். உப்பு கரைந்தது. மகனிடம், “சுவேதகேது... உப்பு என்ன ஆனது? அதை உன்னால் காட்ட முடியுமா?” என்று கேட்டார். “அதெப்படி முடியும், அது தான் கரைந்து விட்டதே! ”என்று தலையை அசைத்தான்.உத்தாலகர் சிறிது உப்பு நீரை மகனின் வாயில் ஊற்ற சுவேதகேது, “நாவால் சுவையை உணர முடியுமே தவிர பார்க்க முடியாது,” என்றான்.உத்தாலகர் அவனிடம், “கடவுளும் இப்படித்தான்! அவரைக் கண்களால் காண முடியாது. எங்கும் நிறைந்திருக்கும் அவரின் இருப்பை நம்மால் உணர மட்டுமே முடியும்,” என்று விளக்கமளித்தார். |
|
|
|