|
முனிவர் ஒருவர் தன் சீடர்களை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், இறைவனின் மீது நீங்கள் பற்று வைத்தால் உறவுகளின் மீதான பற்று தளர்ந்துவிடும் என்றார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சீடன் ஒருவன், எப்படி? என்று சந்தேகம் கேட்டான். புன்னகைத்த முனிவர், விறகு கட்டு ஒன்றை எடுத்துவரும்படி கூறினார். அப்படியே செய்தான் சீடன். ஏற்கெனவே நன்றாகக் கட்டப்பட்டிருந்த விறகு கட்டின்மீது மற்றொரு கயிறால் மேலும் இறுக்கமாகக் கட்டும்படி அந்தச் சீடனுக்கு முனிவர் உத்தரவிட்டார். அவனும் அப்படியே செய்தான். இப்போது முதலில் கட்டியிருந்த கயிற்றைப் பார்! என்று கூறினார் முனிவர். அந்தக் கட்டை முதலில் கட்டியிருந்த கயிறு தளர்ந்து போய் இருந்தது. முனிவர் தொடர்ந்தார், இப்படித்தான் கடவுள் மீதான பற்று எனும் கட்டினை இறுகப் போடும்போது முதலில் பற்றியிருந்த பந்தம் என்னும் கட்டுகள் தாமே தளர்ந்து விடும் என்றார். சீடனுக்கு எல்லாம் புரிந்தது. |
|
|
|