|
குரு ஒருவரிடம் சீடன், இறைவனை எங்கே காணலாம்? என்று கேட்டான். இங்கே பளிச்சென்று வெளிச்சம் தரும் விளக்கை ஊதி அணைத்து விடு... என்றார் குரு. சீடன் தன் அருகில் இருந்த விளக்கை ஊதி அணைத்துவிட, அந்த இடத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. குருவே! இப்போது இருளாகிவிட்டதே... என்ன செய்ய? என்றான், சீடன். அடுத்து, விளக்கைப் பொருத்தினால் வெளிச்சம் வரும், இருள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உன்னுள் இருக்கிறது அல்லவா? என்றார் குரு. ஆமாம் என்றான் சீடன். இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு நீயிருந்தால், இறைவன் உன்னிடம் இருப்பார். அவன் இல்லை என்று நீயிருந்தால், அந்த இருள் போன்று, இறைவன் இல்லாதிருப்பார். எனவே, இறைவன் எங்கும் உள்ளான். இருளையும், வெளிச்சத்தையும் படைப்பவன் அவனே என்றார், குரு. |
|
|
|