|
நல்லவர்கள், தீயவர்கள் இருவருமே காக்கப்பட வேண்டியவர்கள் என்கிறீர்களே... இது எதனால்? என்று சீடன் ஒருவன் குருவிடம் கேட்டார். குரு எதுவும் பேசாமல் ஒரு ஓலையில், 2 என்னும் எண்ணை தலைகீழாக எழுதி, சீடனிடம் காட்டி, இது என்ன? என்று கேட்டார். 2 என்னும் எண்! என்றார் சீடர். 2 இப்படியா இருக்கும்? என்றார் குரு. இல்லை சுவாமி! அது 2 தான். ஆனால் தலைகீழாக எழுதப்பட்டிருக்கிறது என்றார் சீடர். குரு சொன்னார், எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்தான். சிலர் தலைகீழாக எழுதப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சரியான கோணத்தில் பார்த்துப் புரிந்து கொள்வது நம் கடமை. |
|
|
|